Thursday, January 24, 2019

Carnatic Theory of Music (Summary): About Raga

NELLAI M VINAYAGA MOORTHY MCA., MA MUSIC: Carnatic Theory of Music (Summary): About Raga - T...:

YOUTUBE LINK: https://youtu.be/GLeRb95MdmA

எந்த சப்தமானது மனதிற்கும் செவிக்கும் இன்பத்தை தருகிறதோ அதுவே இராகமாகும்.
ஒரு சப்தத்தை கேட்டமாத்திரத்திலேயே மனம் லயிக்குமானால் அதுவே இராகமாகும் .
சப்தம் இரண்டு வகைப்படும் ஒன்று நாதம் மற்றொன்று  இரைச்சல் . ஒழுங்கான,
இனிமையான சப்தத்திலிருந்து உருவாகுவது நாதம். ஒழுங்கில்லாததும்
இனிமையில்லாததும்மான சப்தத்தை இரைச்சல் என்று கூறலாம். 
இசை என்ற சொல்லுக்கு இசையவைப்பது என்பது பொருள். எல்லா உயிரினங்களையும் இசையவைக்கும் சாதனமாக இசை கருதப்படுகிறது.
நாதம் என்பது இனிமையான ஓசை. நாதம் சம்பந்தப்பட்டே இசையும், நாதத்திலிருந்து
ஸ்ருதியும்,  ஸ்ருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும்
உருவாகிறது. ஸ்வரங்களால் ஏற்படுத்தப்படும் ஓசையே ஸ்ருதி எனப்படும். ஸ்ருதி
என்பது இசையின் அல்லது ஸ்வரத்தின் நிலைப்பாடு. இரண்டு ஸ்வரங்களுக்கு
இடையேயான இடைவெளியே ஸ்ருதி எனப்படும்.
கர்நாடக சங்கீதத்தில் அடிப்படையாக 72 இராகங்கள் இருக்கின்றன. அவற்றை தாய்
இராகம் என்றும் சம்பூர்ண  இராகம் என்றும் அழைக்கப்படுகிறது. சம்பூர்ணம்
என்றால் முழுமையடைந்தது என்று பொருள். ஒரு இராகத்தில் ஏழு ஸ்வரங்களும்
வருமானால் அது தாய் இராகம் அல்லது சம்பூர்ண இராகம் எனப்படும். ஆரோ
கணக்கிலும் அவரோ கணத்திலும் ஏழு ஸ்வரங்கள் வருமானால் அது தாய்  இராகம்
எனப்படும். 
ஆரோகணம், அவரோகணம் என்றால் என்ன ? ஸ்வரங்கள் படிப்படியாக மேலேறி போகுமானால்
அது ஆரோகணம் என்றும்,  படிப்படியாக கீழே இறங்கி வருமானால் அது அவரோகணம்
என்றும் அழைக்கப்படும்.
அடிப்படையான 72 இராகத்திலிருந்து பிறக்கக்கூடிய பல ஆயிரக்கணக்கான
இராகத்திற்கு ஜன்ய இராகம் என்று பெயர். ஆரோகணத்திலோ  அல்லது அவரோகணத்திலோ
ஒரு ஸ்வரம் விடுபட்டிருந்தால்கூட அது ஜன்ய இராகமாகும். 🙏🎻

No comments: