Tuesday, January 29, 2019

Kanchi SrI Athivaradar...48 days Sevai from 15/07.2019.


40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ ஸ்வாமி கோயிலில் உள்ள அத்தி வரதர் தீர்த்தத்தில் இருந்து வெளி வரும் அத்தி வரதர் வரும் 15.07.2019 அன்று தீர்த்த குளத்தில் இருந்து வெளி வந்து நீராழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

💥40💥 ஆண்டு ஒரு முறை மட்டுமே  🙏சேவிக்க முடியும்....
👉 ஏனெனில் அவர் இருப்பதோ, 👉நம் 👀கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில்.

💁‍♀கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு 💥குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் 👉கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள்.

💥இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார்.
💁‍♀பெருமாளின் தாருமயமான திருமேனி 💥( மரத்தினால் செய்யப்பட்டது)💥

💁‍♀மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

💁‍♀பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார்.
Get upto 50% off on Home Appliances


🌹பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம்.

💁‍♀அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.

💁‍♀பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர்.

💥ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள்.

🌹வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 💥40💥 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.

💥வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு 🙏சேவை சாதிப்பார்...

💁‍♀நின்ற கோலத்திலும், 💁‍♀சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார்.

💁‍♀பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு 👀கண் குளிர 🙏தரிசிக்கலாம்.

💁‍♀பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.

💥1939 ஆண்டு சேவை சாதித்தார்..
💥1979 ஆண்டு சேவை சாதித்தார்..
அடுத்து
💥15.07.2019 ஆண்டு சேவை சாதிக்க உள்ளார்...

💁‍♀அனைத்து பக்தாலுக்கும் தெரிய படுத்துங்கோ...

இன்னும் ஒருவருடம் என்று 🤔🤔🤔நினைக்க வேண்டாம்...

💁‍♀அத்திவரதரை சேவிக்க 🤔நினைக்க நினைக்க 👉நாட்கள் சென்றுவிடும்....

🌷👉அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில் தரிசனம்....

மூலவர் : வரதராஜர் (தேவராஜர்)
தாயார் :  பெருந்தேவி
தல விருட்சம் :  அரசமரம்
தீர்த்தம் : அனந்த சரஸ்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அத்திகிரி, திருக்கச்சி
ஊர் : காஞ்சிபுரம்

🌷👉சிறப்புக்கள் சில...

* உற்சவருக்கு, "அழைத்து வாழ வைத்த பெருமாள்' என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.

* கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

* வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.

* ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

* காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

Varada Varada Varada Varada.

No comments: