Thursday, January 24, 2019

அன்பு

 உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு

அன்பின் பரிமாற்றங்கள் அதிகரித்தால்

எந்நாளும் ஆனந்தமே

அன்பு ஒரு குற்றமும் செய்யாது

அன்பில்லாமை தான் குற்றங்கள் செய்யும்

நிகழ்காலத்தில் எப்போதும் ஒன்றுபட்டு

மகிழ்ச்சியுடன் வாழப் பழகிக் கொண்டால்

இயற்கையோடு ஒத்து வாழ்வதற்கு வழி பிறக்கும்

அப்படியும் மீறி உறவுகளுக்கு இடையில் பிணக்குகள் தலைபட்டால்

நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும்

அன்பு என்ற பெயரில்

அதிகாரத்தையோ அல்லது ஆணவத்தினையையோ,

முன்னிலைப் படுத்தி இருப்போம்

அன்பு ஒருகாலத்திலும் தவறு செய்ய விடாது

ஏனெனில்

தவறு என்பதே அன்பின் ஆராதனையில்  இல்லை

No comments: