Wednesday, January 23, 2019

சிவாச்சார்யார், குருக்கள் என்றால் சிலருக்கு கேவலமாகவும், இலக்காரமாகவும் இருக்கிறது அது ஏன்?


சிவாச்சார்யார், குருக்கள் என்றால் சிலருக்கு கேவலமாகவும், இலக்காரமாகவும் இருக்கிறது அது ஏன்?
இன்று சில மாடர்ன் பிராமண யுவதி கள் வைக்கும் முதல் கண்டிஷன் "கோவில்பூஜை" செய்யும் பையன் வேண்டாம் என்பதே (அவள் தந்தையே ஒரு கோவில் குருக்களாக இருந்து தான் அந்த குடும்பத்தை கரை சேர்த்திருப்பார்) பாவம்!அவர்களுக்கு ஒபாபாமாவே...
கோவிலுக்கு வந்தாலும் ஒரு குருக்களிடம், தான் பய பக்தியுடன் விபூதி வாங்க வேண்டும்! என்று தெரிய வாய்ப்பு இல்லை.குருக்களாக ஆலயத்தில் இருத்தல்... என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. இறைவனின் நேரடிப் பணியாளன் எனபவரே குருக்கள் ஆவார். உப பணி என்பது ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் குறைகளை இறைவனிடம் அவர்களுக்காக,வேண்டி முறையிடுவது என்பதே. எந்த குருக்களாவது தான் செய்யும் பணிக்கு அதற்கான முழு ஊதியம் பெறுகிறார்களா? இல்லை என்பதே வேதனையான "உண்மை'. ஒரு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆவதற்கு சர்வீஸ் கமிஷன் தேர்வு பாஸ் செய்தால் போதும்..ஆனால் இதே "சிவாச்சார்யார்' என்கிற தகுதிப் பெற அதன் படிப்பின் விபரங்கள் இதோ
1)காமிகரகமம்,
2)யோகஜகம்,
3)சிந்தியம்,
4)காரணாகமம்,
5)அதம்,
6)தீப்த ஆகமம்,
7)குஷ்மம்,
8)சஹஸ்ர ஆகமம்,
9)அம்சுமான் ஆகமம்,
10)சுப்ரபேதம்,
11)விஜயாகமம்,
12)நிக்வாசம்,
12)சுவயம்புவம்,
14)அனலம்,
15)வீராகம்ம்,
16)ரௌரவாகமம்,
17)மகுடாகமம்,
18)விமலாகமம்,
19)சந்திர ஞானம்,
20) முகபிம்பாகமம்,
21)புரோத்கிதாகமம்,
22)லலிதாகமம்,
23)சித்தியாகமம்,
24)சந்தானாகமம்,
25)சர்வோக்த்தமம்,
26)பாரமேஸ்வரம்,
27)கிரணாகமம்,
28)வாதுளாகமம் என 28 வகை. இவற்றுக்கு 207 உப ஆகமம் வேறு!
இதை உருவாக்கிய சிவாச்சார்யார்கள் விபரம்:
1)தூர்வாச சிவாச்சார்யார்,
2)பிங்கள சிவாச்சார்யார்,
3) உக்ர ஜோதி சிவாச்சார்யார்,
4)சுபோதக சிவாச்சார்யார்,
5)கண்ட சிவாச்சார்யார்,
6)விஷ்ண கண்ட சிவாச்சார்யார்,
7)விதயர கண்ட சிவாச்சார்யார்,
8)ராம கண்ட சிவாச்சார்யார்,
9)ஞான சிவ சிவாச்சார்யார்,
10)ஞான சங்கர சிவாச்சார்யார்,
11)ஸோசம்பு சிவாச்சார்யார்,
12)பிரம்ம சம்பு சிவாச்சார்யார்,
13)த்ரி லோன சிவாச்சார்யார்,
14)ராமநாத சிவாச்சார்யார்,
15)ஈசான சிவாச்சார்யார்,
16)வருண சிவாச்சார்யார்,
17)பிரஸாத சிவாச்சார்யார்,
18)அகோர சிவாச்சார்யார் என்பதாகும்.
"தெய்வம் மனுஷ ரூபேனா"

No comments: