Wednesday, January 30, 2019

சுயமரியாதை!

சுயமரியாதை!
##############
கவிஞர் கண்ணதாசன் பத்து பக்கங்களில் சொல்ல வேண்டிய கருத்துக்களை நாலு வரி கவிதையில் சொல்லி விடுவார்.
பெரிய எழுத்தாளர்கள் நூறு பக்கங்களில் சொல்ல வேண்டியதை ஒரு சிறு கதையில் சொல்லி விடுவார்கள்.
அப்படிப் பட்ட என் மனதை தொட்ட கதை ஒன்று!
ஹோட்டல் ஒன்றிற்கு அப்பா தனது இரு மகன்களை அழைத்து வருகிறார். வந்தவர் அந்த இரு சிறுவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்காமலே மூவருக்கும் இட்லி கொண்டு வர சொல்கிறார். சிறுவர்கள் இட்லி வேண்டாம் அப்பா! சப்பாத்திதான் வேண்டும் என்கின்றனர். அப்பா இட்லி போதும் .இதைச் சாப்பிடுங்கள் என்கிறார். அப்பாவிடம் சப்பாத்தி வாங்க பணமில்லை என்ற விவரம் தெரியாமல் இட்லி சாப்பிட தயங்குகின்றனர் சிறுவர்கள்!
அந்த சமயத்தில் படித்த பணக்கார இளைஞன் ஒருவன் சாப்பிட வருகிறான்.அவனைக் கண்டதும் சர்வர் வாங்க சார் என்று வரவேற்று என்ன வேண்டும் சார் என்று கேட்கிறான். இளைஞன் நெய் ரோஸ்டுக்கு ஆர்டர் கொடுக்கிறான். சர்வர்  மணக்க  மணக்க நெய் ரோஸ்ட் கொண்டுவந்து வைக்கிறான் .அப்போதுதான் தன் அருகில் இருக்கும் சிறுவர்களையும் அவர்களது அப்பா வையும் கவனிக்கிறான் இளைஞன்.
உடனே சர்வரை அழைத்து என்னப்பா நெய் ரோஸ்ட் ! வாயிலேயே வைக்க முடியலியே! இதை எடுத்துட்டு போ! போயி இந்த சிறுவர்களுக்கு வைத்தது போல எனக்கும் இட்லி கொண்டு வா என்கிறான்.
சார்.! நல்ல நெய் சார். உங்களுக்காக ஸ்பெசலாக போட்டது என்கிறான் சர்வர்.
ஏய் ! நான் சொன்னதைச் செய் என்கிறான் இளைஞன்.
சர்வரும் நெய் ரோஸ்டை எடுத்துக் கொண்டு போய், இட்லி கொண்டு வந்து வைக்கிறான்.
இளைஞன் மகழ்வோடு இட்லியை சாப்பிடுகிறான்.
இதைப் பார்த்த அந்த சிறுவர்களும் இட்லியை ஆவலுடன் சாப்பிடுகின்றனர்.
இவ்வளவுதான் கதை!
ஆனால் இதில் எவ்வளவு தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன!
அந்த இளைஞன் நினைத்தால் அந்த சிறுவர்களுக்கும் நெய் ரோஸ்ட் வாங்கி கொடுத்திருக்க முடியும்.
அப்படி செய்தால் அந்த அப்பாவின் சுய மரியதைக்கு பங்கம் ஏற்பட்டிருக்கும். அப்பாவின் இயலாமையை எடுத்து காட்டுவதாக அமையும்.அப்பாவின் மேல் சிறுவர்களுக்கு மதிப்பு குறையும்.
இவ்வளவும்
 அந்த இளைஞனின் செயலால் காப்பாற்ற பட்டு விட்டன !
இது பணக்கார இளைஞர்கள் பண்பாட்டை,பிறரின் சுய மரியதையை எப்படி காக்க வேண்டும் என்பதற்கு ஒரு பாடம்.
Valid till : Stock Lasts

Auto Kaaran Prank show | Semma Kalai #3 | LVSMV ROCKSTAR

Tuesday, January 29, 2019

அழகான வரிகள்....படித்ததில் பிடித்தது*

வியந்து போன வரிகள்
"" "" "" "" "" "" "" "" "" "
👌👌👌👌👌👌👌
நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌👌

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌👌

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
👌👌👌👌👌👌👌👌

பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌👌

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌👌

வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
 👌👌👌👌👌👌👌👌

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌👌

திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌👌

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌👌

மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
👌👌👌👌👌👌👌👌



நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌👌

இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌

பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌👌

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..  
👌👌👌👌👌👌👌

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..
👌👌👌👌👌👌👌

பிடித்திருந்தால் பகிரவும்...!!!

Kanchi SrI Athivaradar...48 days Sevai from 15/07.2019.


40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ ஸ்வாமி கோயிலில் உள்ள அத்தி வரதர் தீர்த்தத்தில் இருந்து வெளி வரும் அத்தி வரதர் வரும் 15.07.2019 அன்று தீர்த்த குளத்தில் இருந்து வெளி வந்து நீராழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

💥40💥 ஆண்டு ஒரு முறை மட்டுமே  🙏சேவிக்க முடியும்....
👉 ஏனெனில் அவர் இருப்பதோ, 👉நம் 👀கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில்.

💁‍♀கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு 💥குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் 👉கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள்.

💥இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார்.
💁‍♀பெருமாளின் தாருமயமான திருமேனி 💥( மரத்தினால் செய்யப்பட்டது)💥

💁‍♀மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

💁‍♀பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார்.
Get upto 50% off on Home Appliances


🌹பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம்.

💁‍♀அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.

💁‍♀பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர்.

💥ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள்.

🌹வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 💥40💥 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.

💥வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு 🙏சேவை சாதிப்பார்...

💁‍♀நின்ற கோலத்திலும், 💁‍♀சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார்.

💁‍♀பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு 👀கண் குளிர 🙏தரிசிக்கலாம்.

💁‍♀பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.

💥1939 ஆண்டு சேவை சாதித்தார்..
💥1979 ஆண்டு சேவை சாதித்தார்..
அடுத்து
💥15.07.2019 ஆண்டு சேவை சாதிக்க உள்ளார்...

💁‍♀அனைத்து பக்தாலுக்கும் தெரிய படுத்துங்கோ...

இன்னும் ஒருவருடம் என்று 🤔🤔🤔நினைக்க வேண்டாம்...

💁‍♀அத்திவரதரை சேவிக்க 🤔நினைக்க நினைக்க 👉நாட்கள் சென்றுவிடும்....

🌷👉அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில் தரிசனம்....

மூலவர் : வரதராஜர் (தேவராஜர்)
தாயார் :  பெருந்தேவி
தல விருட்சம் :  அரசமரம்
தீர்த்தம் : அனந்த சரஸ்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அத்திகிரி, திருக்கச்சி
ஊர் : காஞ்சிபுரம்

🌷👉சிறப்புக்கள் சில...

* உற்சவருக்கு, "அழைத்து வாழ வைத்த பெருமாள்' என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.

* கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

* வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.

* ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

* காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

Varada Varada Varada Varada.

Monday, January 28, 2019

வேண்டாம் விமர்சனம்!



தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென பார்க்காமல் விழுங்கி விடுவார்.

இவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றை தருவர். இதனால் புண்ணியம் சேருமென கருதினர்.

ஒரு நாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரை பரிகாசம் செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையைப் போட, மகரிஷியும் வாயில் போட்டார்.

மன்னன் சிரித்தபடியே போய்விட்டான். மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர் மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் இல்லையா?

அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர் என சொல்லி விட்டு சென்றார்.

மன்னன் நடுங்கி விட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து தங்கினான்.

இளம்பெண்களை வரவழைத்து, திருமணத்திற்குரிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பி விடுவான். இதை அவ்வூரில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டினர்.

மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்என்றனர். ஒருநாள், பார்வையற்ற கணவரை அழைத்து வந்த ஒரு பெண், அரசனின் குடில் முன்பு நின்று பிச்சை கேட்டாள்.

அந்த கணவன் நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்? எனக் கேட்டார். அரசன் வீட்டு முன்பு என்றாள் அந்தப் பெண்.  ஓ! தானம் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே அவன் வீட்டு முன்பா? என்றார் அந்த பார்வையற்றவர்.

அந்தப்பெண் அவரது வாயை பொத்தினாள். அன்பரே! என் கற்பின் சக்தியால் நான் முக்காலத்தையும் உணர்ந்தவள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரை சாணத்தை கொடுத்தான்.

அது  நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்ணுவதற்காக தயாரானது. அவ்விஷயம் இவனுக்குத் தெரிய வரவே, இவன் கன்னியருக்கு தர்மம் செய்து, நற்போதனைகளை செய்தான்.

ஆனால் இவனை பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டு கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. 

இவனைப் பற்றி தவறுதலாக பேசி, அதை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அடுத்த பிறவியிலும் பார்வையற்றே பிறப்பீர்கள் என்றாள். தவறு செய்தவர்கள் திருந்தும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது.

அப்படி செய்தால் அவன் செய்த பாவங்களை பங்கு போட்டு கொள்ளும் நிலைமை ஏற்படும்.

Go Win The World : Get A Website For Your Business (FREE Domain + Hosting + Email )

Sunday, January 27, 2019

A leaf as a wick🕯️🕯️

A leaf as a wick🕯️🕯️ Locally known as ‘pei viratti/pei marutti’ (literally, ‘ghost chaser’) , Malabar Catmint (Anisomeles Malabarica) is a medicinal plant that is commonly found in India. This herb's leaf is lit up like a cotton wick to chase mosquitoes away. These leaves were brought to the Open House, our Public Meeting Session, from the farm of Padmashri. T. Venkatapathi Reddiar, a horticulturist and florist from Puducherry.



Original Post by

Kiran Bedi
• 2nd Lt. Governor of Puducherry at Government of Puducherry

Get upto 80% off on Women's Clothing
Valid till : Stock Lasts

Please Comment, Follow by blog

Rare Footage of 1947 India

Please Comment, Follow by blog

திருநீர்மலை

திருநீர்மலை… அரசுத் துறை காப்பாற்றாது! நாம்தான் போராட வேண்டும்!

திருநீர்மலை திவ்ய தேசம் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும், மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன.

108 திவ்ய தேசங்களில் 61வது இது. இங்கு நான்கு நிலைகளிலும் பெருமாளைத் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் எனும் நிலையில் தரிசிக்கலாம். 100 அடி உயர மலையும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு
பெருமாள் கோவிலுக்கு மட்டுமே சொந்தமான நிலம்.
இக்கோவில் பல உப கோவிலையும் நன்செய், புன்செய் நிலங்கள் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கொண்டது. வருட வருமானமே கோடிகளை தாண்டும். 3 வருடம் முன் வரை பரம்பரை அறங்காவலர் கண்காணிப்பில் திவ்யமாக நிர்வகிக்கபட்டு வந்தது. தற்போது அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடிக் கண்காணிப்பில் நிர்வாக அதிகாரி பி.சக்தி கவனித்து (கபளீகரம்) செய்து வருவதாக கோயில் பணியாளர்களே கூறுகின்றனர்.

நிர்வாக அதிகாரி பி.சக்தி வந்த சில நாட்களிலே மலையிலே கோயில் பின் பக்கம் “இயேசு சபை அல்லேலூயா” ஆரம்பிக்க மறைமுகமாக பணம் பெற்றுக்கொண்டதாகவும், அவரின் ஆசிர்வாதத்தில் கிருத்துவ சபை நடந்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

ஞாயிற்று கிழமைகளில் அவர்கள் நடத்தும் ஜெபக்கூட்டம் கோவில் மேலேயே பட்டாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் பக்தர்கள் அரண்டு ஓடும் அளவில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகித்து தொல்லை கொடுக்கின்றனர்.

யாருடைய இடத்தில் யாரு ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்வது. பெரும்பான்மையாக இருக்கும் போதே இந்த கதி. ஒவ்வொரு கோவிலாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலைக்கோவில்களை குறி வைக்கிறது அந்த கும்பல்.

மலையே கோவில் அதுதான் திருநீர்மலை. அதற்கு சாட்சியாக மலையடிவாரம் சுற்றி நான்கு திசையிலும் பலி பீடக்கல் நடப்பட்டு சிறப்பு தினங்களில் பூசைகள் செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் எல்லைக்குள்ளே மலையடிவாரத்தின் உட்பகுதியிலேயே இறைச்சி கடை, கோழி கடை நடந்து வருகிறது.

அதனை தடுக்க வேண்டிய நிர்வாக அதிகாரி பி. சக்தி மௌனமாகவே இருக்கிறார் .அதன் காரணம் விசாரித்தால் அந்த கடைகளில் இருந்துதான் அவர் வீட்டுக்கே வார வாரம் கறி அனுப்பபடுகிறதாம் .

இந்து கோவிலில் வேலை செய்பவர்கள் ஊழியர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாய விதி அதிலும் நிர்வாக அதிகாரி ஊரில் உள்ள இந்துக்களை வேலைக்கு வைக்காமல் அதே ஊரில் உள்ள மதம் மாறியவர்களை வேலைக்கு நியமித்து உள்ளார், வேலை செய்பவர்கள் பெயரளவில் மட்டுமே இந்து. ஆனால் அவர்கள் திடீர் சபை கிறித்துவ கூட்டத்தினர்.

கோவில் அன்னதான உண்டியல் மாத வருமானம் கடந்த காலங்களில் சராசரி 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம். தற்போது 20 ஆயிரம் அதிக பட்சம் 25 ஆயிரம் மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது.

உணர்வுள்ள இந்து இயக்கங்கள் இதனை சட்டப்படி எதிர்கொண்டு திருநீர்மலையை சதிகாரர்களிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுப்பார்களா?

இந்திய பொருளாதாரமா??? உங்க உடல் நலமா???

தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...

ஆச்சரியமா இருக்கா?  தொடர்ந்து படிங்க.....

ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்...

அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...

வட்டியும் கட்ட மாட்டான்...
பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட  பிரயோஜனம் இல்லாதவன்...

கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்...

இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...

இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...

சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...

பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...

இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...

இவனுக்கு சுகர் வராது...
இதய நோய் வராது...
குண்டாகவும் மாட்டான்...
ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...

உலக
பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...

அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...

10 இதய டாக்டர்...
10 பல் டாக்டர்...
10 டயட்டீசியன்...

இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...

உடனே முடிவெடுங்க
சைக்கிளா?
காரா?

இந்திய பொருளாதாரமா???
உங்க உடல் நலமா???

Thursday, January 24, 2019

Carnatic Theory of Music (Summary): About Raga

NELLAI M VINAYAGA MOORTHY MCA., MA MUSIC: Carnatic Theory of Music (Summary): About Raga - T...:

YOUTUBE LINK: https://youtu.be/GLeRb95MdmA

எந்த சப்தமானது மனதிற்கும் செவிக்கும் இன்பத்தை தருகிறதோ அதுவே இராகமாகும்.
ஒரு சப்தத்தை கேட்டமாத்திரத்திலேயே மனம் லயிக்குமானால் அதுவே இராகமாகும் .
சப்தம் இரண்டு வகைப்படும் ஒன்று நாதம் மற்றொன்று  இரைச்சல் . ஒழுங்கான,
இனிமையான சப்தத்திலிருந்து உருவாகுவது நாதம். ஒழுங்கில்லாததும்
இனிமையில்லாததும்மான சப்தத்தை இரைச்சல் என்று கூறலாம். 
இசை என்ற சொல்லுக்கு இசையவைப்பது என்பது பொருள். எல்லா உயிரினங்களையும் இசையவைக்கும் சாதனமாக இசை கருதப்படுகிறது.
நாதம் என்பது இனிமையான ஓசை. நாதம் சம்பந்தப்பட்டே இசையும், நாதத்திலிருந்து
ஸ்ருதியும்,  ஸ்ருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும்
உருவாகிறது. ஸ்வரங்களால் ஏற்படுத்தப்படும் ஓசையே ஸ்ருதி எனப்படும். ஸ்ருதி
என்பது இசையின் அல்லது ஸ்வரத்தின் நிலைப்பாடு. இரண்டு ஸ்வரங்களுக்கு
இடையேயான இடைவெளியே ஸ்ருதி எனப்படும்.
கர்நாடக சங்கீதத்தில் அடிப்படையாக 72 இராகங்கள் இருக்கின்றன. அவற்றை தாய்
இராகம் என்றும் சம்பூர்ண  இராகம் என்றும் அழைக்கப்படுகிறது. சம்பூர்ணம்
என்றால் முழுமையடைந்தது என்று பொருள். ஒரு இராகத்தில் ஏழு ஸ்வரங்களும்
வருமானால் அது தாய் இராகம் அல்லது சம்பூர்ண இராகம் எனப்படும். ஆரோ
கணக்கிலும் அவரோ கணத்திலும் ஏழு ஸ்வரங்கள் வருமானால் அது தாய்  இராகம்
எனப்படும். 
ஆரோகணம், அவரோகணம் என்றால் என்ன ? ஸ்வரங்கள் படிப்படியாக மேலேறி போகுமானால்
அது ஆரோகணம் என்றும்,  படிப்படியாக கீழே இறங்கி வருமானால் அது அவரோகணம்
என்றும் அழைக்கப்படும்.
அடிப்படையான 72 இராகத்திலிருந்து பிறக்கக்கூடிய பல ஆயிரக்கணக்கான
இராகத்திற்கு ஜன்ய இராகம் என்று பெயர். ஆரோகணத்திலோ  அல்லது அவரோகணத்திலோ
ஒரு ஸ்வரம் விடுபட்டிருந்தால்கூட அது ஜன்ய இராகமாகும். 🙏🎻

Indian Railways Golden Chariot

Bangalore to Goa Luxury Train by Indian Railways Golden Chariot 👇🏽👇🏽👇🏽Enjoy

Please Comment, Follow by blog

அன்பு

 உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு

அன்பின் பரிமாற்றங்கள் அதிகரித்தால்

எந்நாளும் ஆனந்தமே

அன்பு ஒரு குற்றமும் செய்யாது

அன்பில்லாமை தான் குற்றங்கள் செய்யும்

நிகழ்காலத்தில் எப்போதும் ஒன்றுபட்டு

மகிழ்ச்சியுடன் வாழப் பழகிக் கொண்டால்

இயற்கையோடு ஒத்து வாழ்வதற்கு வழி பிறக்கும்

அப்படியும் மீறி உறவுகளுக்கு இடையில் பிணக்குகள் தலைபட்டால்

நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும்

அன்பு என்ற பெயரில்

அதிகாரத்தையோ அல்லது ஆணவத்தினையையோ,

முன்னிலைப் படுத்தி இருப்போம்

அன்பு ஒருகாலத்திலும் தவறு செய்ய விடாது

ஏனெனில்

தவறு என்பதே அன்பின் ஆராதனையில்  இல்லை

🌾🍃ஜென் கதை📋 சிகரம் தொடு.

 ஒரு பெரிய பணக்காரர்.👳 மன அழுத்தம் தாங்காமல் தவித்தார். அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். ‘அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.

☘பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார்.

🍁எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு, " எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் நிகழ் காலத்தை மட்டும் ஆனந்தமாக அனுபவி " என்று அறிவுரை சொன்னார்.
அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

🍁‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்தமாதிரி சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!’

🍁ஜென் துறவி கோபப்படவில்லை. ‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார்.

🍁‘ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’

‘பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’

🍁’அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான் வந்திருக்கேன்!’

🍁‘உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோமீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?’

🍁‘நிச்சயமா’ என்றார் அந்தப் பணக்கார். ‘அதில் என்ன சந்தேகம்?’

🍁‘எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான் வெளிச்சம் காட்டும். அதை வெச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர் எப்படிப் பயணம் செய்வீங்க?’

🍁‘என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்குமட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதை வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோமிட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூடப் போகலாமே!’

🍁’அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனையும்!’ என்றார் ஜென் துறவி. ‘சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க, அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!’

💥முயற்சி  செய்யுங்கள்💥

வெற்றி நிச்சயம்

🌼சந்திர பலம் உள்ள நாட்கள்🌼 தேடினாலும் எளிதில் கிட்டா பதிவு

🌼எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்

🌼நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.

🌼நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.

🌼பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.

🌼நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

🌼அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

🌼ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

Wednesday, January 23, 2019

ஸ்ரார்த்தம் - விதிமுறைகள் - (ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்).

ஸ்ரார்த்தம் - விதிமுறைகள் - (ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்).

சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அறிவுரை

பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா .....

நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம் உண்டு. பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த நற்கர்மங்களின் பயனாகவும், பின் சந்ததிகள் செய்யும் பித்ரு காரியங்களின் பயனாகவும், பிரேத நிலை நீங்கியவராய் பித்ரு லோகத்தில் இடம் பெற்றவராக விளங்குகின்றனர்.

பித்ருக்களை உத்தேசித்து செய்யும் கர்மாவே ஸ்ரார்த்தம். நாம் செய்யும் முக்கியமான கர்மாக்களில் ஸ்ரார்த்தமும் ஒன்று. நமது முன்னோர்கள் தெய்வங்களுக்கு செய்யும் பூஜைகளை விட ஸ்ரார்தத்தை மிக பயபக்தியுடனும் ஆசாரத்துடனும் செய்து வந்திருக்கிறார்கள்.

மஞ்சள் துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்து விட்டு பிறகு நிதானமாக முடிந்த போது தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றலாம். ஆனால் ஸ்ரார்த்தம் அவ்வாறல்ல. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டபடி ஸ்ரார்த்தம் செய்தே ஆக வேண்டும்.

ஸ்ரார்த்தம் செய்வதினால் யாருக்கெல்லாம் திருப்தி?

1. எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.
2. அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே-தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.
3. ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.
4. எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்.
5. பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும்.
6. பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்.

இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ரார்த்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.

சிவாச்சார்யார், குருக்கள் என்றால் சிலருக்கு கேவலமாகவும், இலக்காரமாகவும் இருக்கிறது அது ஏன்?


சிவாச்சார்யார், குருக்கள் என்றால் சிலருக்கு கேவலமாகவும், இலக்காரமாகவும் இருக்கிறது அது ஏன்?
இன்று சில மாடர்ன் பிராமண யுவதி கள் வைக்கும் முதல் கண்டிஷன் "கோவில்பூஜை" செய்யும் பையன் வேண்டாம் என்பதே (அவள் தந்தையே ஒரு கோவில் குருக்களாக இருந்து தான் அந்த குடும்பத்தை கரை சேர்த்திருப்பார்) பாவம்!அவர்களுக்கு ஒபாபாமாவே...
கோவிலுக்கு வந்தாலும் ஒரு குருக்களிடம், தான் பய பக்தியுடன் விபூதி வாங்க வேண்டும்! என்று தெரிய வாய்ப்பு இல்லை.குருக்களாக ஆலயத்தில் இருத்தல்... என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. இறைவனின் நேரடிப் பணியாளன் எனபவரே குருக்கள் ஆவார். உப பணி என்பது ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் குறைகளை இறைவனிடம் அவர்களுக்காக,வேண்டி முறையிடுவது என்பதே. எந்த குருக்களாவது தான் செய்யும் பணிக்கு அதற்கான முழு ஊதியம் பெறுகிறார்களா? இல்லை என்பதே வேதனையான "உண்மை'. ஒரு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆவதற்கு சர்வீஸ் கமிஷன் தேர்வு பாஸ் செய்தால் போதும்..ஆனால் இதே "சிவாச்சார்யார்' என்கிற தகுதிப் பெற அதன் படிப்பின் விபரங்கள் இதோ
1)காமிகரகமம்,
2)யோகஜகம்,
3)சிந்தியம்,
4)காரணாகமம்,
5)அதம்,
6)தீப்த ஆகமம்,
7)குஷ்மம்,
8)சஹஸ்ர ஆகமம்,
9)அம்சுமான் ஆகமம்,
10)சுப்ரபேதம்,
11)விஜயாகமம்,
12)நிக்வாசம்,
12)சுவயம்புவம்,
14)அனலம்,
15)வீராகம்ம்,
16)ரௌரவாகமம்,
17)மகுடாகமம்,
18)விமலாகமம்,
19)சந்திர ஞானம்,
20) முகபிம்பாகமம்,
21)புரோத்கிதாகமம்,
22)லலிதாகமம்,
23)சித்தியாகமம்,
24)சந்தானாகமம்,
25)சர்வோக்த்தமம்,
26)பாரமேஸ்வரம்,
27)கிரணாகமம்,
28)வாதுளாகமம் என 28 வகை. இவற்றுக்கு 207 உப ஆகமம் வேறு!
இதை உருவாக்கிய சிவாச்சார்யார்கள் விபரம்:
1)தூர்வாச சிவாச்சார்யார்,
2)பிங்கள சிவாச்சார்யார்,
3) உக்ர ஜோதி சிவாச்சார்யார்,
4)சுபோதக சிவாச்சார்யார்,
5)கண்ட சிவாச்சார்யார்,
6)விஷ்ண கண்ட சிவாச்சார்யார்,
7)விதயர கண்ட சிவாச்சார்யார்,
8)ராம கண்ட சிவாச்சார்யார்,
9)ஞான சிவ சிவாச்சார்யார்,
10)ஞான சங்கர சிவாச்சார்யார்,
11)ஸோசம்பு சிவாச்சார்யார்,
12)பிரம்ம சம்பு சிவாச்சார்யார்,
13)த்ரி லோன சிவாச்சார்யார்,
14)ராமநாத சிவாச்சார்யார்,
15)ஈசான சிவாச்சார்யார்,
16)வருண சிவாச்சார்யார்,
17)பிரஸாத சிவாச்சார்யார்,
18)அகோர சிவாச்சார்யார் என்பதாகும்.
"தெய்வம் மனுஷ ரூபேனா"

Monday, January 21, 2019

ஆதி சங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :

ஆதி சங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... :

1. எது இதமானது ?
தர்மம்.

2. நஞ்சு எது ?
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.

3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?
பற்றுதல்.

4. கள்வர்கள் யார் ?
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.

5. எதிரி யார் ?
சோம்பல்.

6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?
இறப்புக்கு.

7. குருடனை விட குருடன் யார் ?
ஆசைகள் அதிகம் உள்ளவன்.

8. சூரன் யார் ?
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.

9.மதிப்புக்கு மூலம் எது ?
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.

10. எது துக்கம் ?
மன நிறைவு இல்லாமல் இருப்பது.

11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.

12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?
இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.

13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?
நல்லவர்கள்.

14. எது சுகமானது ?
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.

15. எது இன்பம் தரும் ?
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.

16. எது மரணத்துக்கு இணையானது ?
அசட்டுத்தனம்.

17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?
காலமறிந்து செய்யும் உதவி.

18. இறக்கும் வரை உறுத்துவது எது ?
ரகசியமாகச் செய்த பாவம்.

19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள், சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !

20. சாது என்பவர் யார் ?
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.

21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.

22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.

23. செவிடன் யார் ?
நல்லதைக்கேட்காதவன்.

24. ஊமை யார் ?
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான
சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.

25. நண்பன் யார் ?
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.

26. யாரை விபத்துகள் அணுகாது ?
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்.

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்.

திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.

1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.

2. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.

3. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

4. மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

5. மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.

6. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

7. திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

8. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

9. திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

10. திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

11. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

12. திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

13. திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

14. நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

15. திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

16. தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.

17. முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

18. திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.

19. இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.

20. இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.




21. இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

22. முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.

23. அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டி னம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.

24. முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ள.ன

25. முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

26. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.

27. முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.

28. திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

29. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

30. அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.

31. திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.

32. திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

33. குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.

34. முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.

35. செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.

36. வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

37. மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.

38. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, «பரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.

39. உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.

40. இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.

உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா?

மதராஸ்  உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா? இதோ.........
--------------------------------------------------
"முதல் தலைமுறை மனிதர்கள்".

மதராஸ், தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான்" என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான் விடை கிடைத்தது. அந்த விபரங்களைத் திரட்ட பெரும் உழைப்பைச் சிந்தியுள்ளார் ஆசிரியர்.
ஃபிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர் ஜே.பி.பி. மொரேயின் "முஸ்லீம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி" என்ற நூலின் சிம்பைப் பிடித்துக்கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.

உஸ்மான் - ஒரு சுருக்கச் செய்தி : கான் பகதூர் சர் முகமது உஸ்மான்,
Khan Bagadur Sir Mohammad Usman KCSI KCIE 1884 - 1960.
பிரிட்டிஷ் இந்தியாவின் தஞ்சாவூரில் பிறப்பு, சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், சென்னைச் சட்டக் கல்லூரியிலும் பட்டம் பெற்றார்.

1913 ல் சென்னை மாநாகராட்சி உறுப்பினர், தொடர்ந்து 12 ஆண்டுகள்.
1924ல் சென்னை மாநகராட்சி மேயர்.
1916 - நீதிக்கட்சி தோற்றம் - உறுப்பினர். பின்னர் சென்னை மாகாணப் பொதுச்செயலாளராகத் தேர்வு - 1919 திருச்சி மாநாட்டுத் தலைவர்.
1920 முதல் சட்டமன்றத் தேர்தல். வெற்றி பெற்று நீதிக்கட்சி ஆட்சி அமைக்க
1934 வரை சட்டமன்ற உறுப்பினர்.
1925 முதல் நிர்வாகசபை உறுப்பினர். பின்னர் நிர்வாகசபையின் துணைத்தலைவர்.
1932 - 34 சென்னை மாகாண உள்துறை அமைச்சர்.

1934ல் சென்னை மாகாண கவர்னர், Governor of Madras Presidency - Acting.
இதன்மூலம் இந்தியமாகாணங்களிலேயே கவர்னர் பதவி வகித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் - அத்துடன் முதல் தமிழர், முதல் முஸ்லீம் என்ற பெருமையும் கூட. அந்த வருடம் சென்னை சென்னைப் பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றில் இந்தியர் ஒருவர் "வேந்தர்" என்ற தகுதியில் கலந்துகொண்ட முதல் வரலாற்று நிகழ்வு இதுவே ஆகும். பிரமிக்கத்தக்க விசயம் என்னவென்றால் தான் பட்டம்பெற்ற பல்கலையில் தானே பட்டம் வழங்கும் நிலைக்கு உயர்ந்த உழைப்புதான்.

1941ல் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர், Member of Defence Council of India.
1942ல் வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர்,
Member of the Executive Council of Viceroy of India. இக்குழுவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர் சி.பி.இராமசாமி ஐயர் உள்ளிட்ட 19 உறுப்பினர்கள் இருந்தனர்.

1920 ல் கான் சாகிப் பட்டம்.
1921 ல் கான் பகதூர் பட்டம்.
1925ல் கெய்ஸர் இ ஹிந்த் வெள்ளிப் பதக்கம்.
1928 ல் இங்லாந்தின் உயரிய "நைட் - Knight " விருது.
அதே ஆண்டில் "சர் - Sir" பட்டம்.

KCSI - Most exalted Order of the Star of India, Knight Commander Order of
           Chivalry - Founded by Queen Victoria in 1861.

இதுபோல் தமிழகத்தின் 30 ஆழுமைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழக வரலாற்றின் தவிர்க்க இயலாச் சக்திகளாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்களாகவும் இருந்து, வெளியுலகிற்கு அறியப்படாத ஆற்றல்மிகு தியாகிகளின் பங்களிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

Thanks for the information:
வெளியீடு : நிலவொளி பதிப்பகம், சென்னை.

Wednesday, January 16, 2019

Monday, January 14, 2019

Pudukkottai Day 14-01-1974

இன்று புதுக்கோட்டை மாவட்டம் ( 14 - 01- 1974) உதயமான நாள். "Pudukkottai Day".

மாட்சிமை தாங்கிய பிரகதாம்பாள் தாஸ் H.H தொண்டைமான் மன்னர்கள் புதிய கோட்டை கொத்தளங்களுடன் கூடிய புதிய நகரை நிர்மாணித்து அதற்கு "புதுக்கோட்டை " என பெயரிட்டு 1686- 1948 வரை இன்றைய இந்தியாவை போன்று தனி நாணயம், தனி கொடி என தனி நாடாக கோலோச்சினர்.

அன்றைய இந்தியாவிலேயே முதன்முதலாக பேருந்துகள் , மகிழுந்து போன்றவை அறிமுகப்படுத்தியவர்கள் எங்களது மாட்சிமை தாங்கிய மாமன்னர்கள் தான்.

இன்றைய தமிழகத்திலேயே முதல் நூற்றாண்டு கண்ட நகராட்சியும் எங்களது புதுக்கோட்டை தான்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 3-3-1948 வரை தனி சமஸ்தானமாக கோலோச்சி வந்த எமது சமஸ்தானத்தை அன்றைய சுதந்திர இந்தியாவின் உள்துறை அமைச்சர் உயர்திரு.சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க அன்றைய கால கட்டத்தில் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மாட்சிமை தாங்கிய மாமன்னர் பிரகதாம்பாள் தாஸ் H.H இராஜகோபால தொண்டைமான் அவர்கள் இந்தியாவுடன் இணைத்திட இசைவு தெரிவித்தார்.

அதன்படி எண்ணிலடங்கா சொத்துக்களையும் அன்றைய சமஸ்தானம் கருவூலத்தில் இருந்த ₹72 இலட்சம் பணத்துடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை 3- 3- 1948ம் ஆண்டு இந்தியாவுடன் இணைத்தார்.

First Ever Rupee in INDIA

Please Follow & Comment in this BLOG


PONGAL WISHES

Wish you a very Happy Pongal
Please Follow & Comment 
This Blog

Magara Jothi in Sabari Mala

Darshanam from SabariMalai &  Poonambalamedu today evg..
🔔🙏🏻🔔

Please Follow & Comment my BLOG

Sunday, January 13, 2019

MakaraVilakku pooja @ Sabarimala Sri Dharma Sastha temple

That is the Sabarimala Sri Dharma Sastha temple fully decorated for the MakaraVilakku pooja today!! Swamiye saranam Ayyappa!!










💚 ஒஷோ 💚

யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய்........???

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன.......???

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக் கொண்டுள்ளது

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா.......???

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.

அது மனதின் வேலை.

பொங்கல் பானை வைக்க நல்ல நேரம்.

நமஸ்காரங்கள்.

பொங்கல் பண்டிகை 15 ஆம் தேதி செவ்வாய் கிழமை பற்றி தெரிந்து கொள்ளவும்.  / 16 ஆம்  தேதி புதன் கிழமை  கனு.

முதல் நாள் 14 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு 11.21 மணிக்கு வாக்ய பஞ்சாங்கப்படியும்

திருக்கணிதப்படி இரவு 07.49 மணிக்கும்           தை மாதம் பிறக்கிறபடியால்
மறுநாள் அதாவது 15 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று தான் உத்ராயண புண்யகால மகர ஸங்ராந்தி மாஸ பிறப்பு தர்பணம் பண்ண வேண்டும்.

பொங்கல் பானை வைக்க நல்ல நேரம்.

செவ்வாய் காலை 08.15 மணிக்கு மேல்  09.00 மணிக்குள் சுக்ர ஹோரையில் விசேஷம்.

அல்லது 10.45 க்கு மேல் 11.15 க்குள் சந்த்ர ஹோரை விசேஷம்.

தர்பணம் முடித்துவிட்டு ஸுர்ய நாராயண பூஜை விசேஷம்.

மறு நாள் புதன்கிழமை கனுப்பிடி வைக்க உகந்த நேரம் காலை 06.30 மணி முதல் 07.30 மணி வரை.

க்ஷேமமா இருக்கணும்.

Saturday, January 12, 2019

அய்யப்பன் வரலாறு

அவசியம் படிக்கவும்... திரு. அரவிந்த் சுப்ரமணியம்(Aravind Subramanyam) அவர்கள் எழுதிய அய்யப்பன் வரலாறு இங்கே உங்களுக்காக. அதில் சபரிமலை, மாளிகைபுரத்தம்மன், வாவர் சுவாமி பற்றிய கட்டுகதைகள் மற்றும் பெண்கள் வரக்கூடாததற்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றை உங்களுக்காக கீழே பதிவிடுகிறேன். இதற்காக நேரம் ஒதுக்கி இதை படித்து தெளிவுபெறுவீராக. சபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம் சபரிமலைக் கோவிலின் புராண சரிதம் மஹாவிஷ்ணு மோகினியாக உருக்கொண்டு அவதாரம் எடுத்து, சிவ விஷ்ணு சக்திகள் சங்கமமாக – கர்ப்பவாசம் புரியாமல் சங்கல்ப மாத்திரத்தில் அவதரித்தவர் மஹாசாஸ்தா. இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் சிவ விஷ்ணு சங்கமம் என்பது சக்திகளின் சேர்க்கையே. உடல் சேர்க்கை அல்ல. சாஸ்தாவின் ஆவிர்பாவம் ஆனதும் அவர் கைலையங்கிரியில் தனக்கென ஓர் உலகத்தை உருவாக்கி, பூரணை புஷ்கலை எனும் இரு தேவியரை மணந்து அவ்வுலகிலிருந்து அருளாட்சி நடத்தலானார். 

மஹிஷி எனும் அரக்கியை அழிக்கும் பொருட்டு, மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்து, ஆகாய கங்கைவழியாக பம்பையாற்றங்கரையில் ஒரு குழந்தையாகத் தோன்றினார். பரமசிவன் கொடுத்த நவரத்தின மணிமாலையைக் கழுத்தில் அணிந்திருந்த காரணத்தால் - மணிகண்டன் என்று பெயரிடப்பட்டார், (எல்லோரும் கருதுவது போல, அடிக்கும் கோவில் மணியல்ல – சம்ஸ்க்ருதத்தில் அதற்கு கண்டா என்று பெயர். மணி என்றால் நவரத்தின மணி என்றே பொருள். மணிப்பூர் என்றொரு மாநிலம் உள்ளதும் இங்ஙனமே. Land of Jewel என்றே அதற்குப்பெயர்.) கழுத்தில் நவரத்தினமணிகள் ஜொலித்த காரணத்தால் மணிகண்டன் என்று பெயரிட்டு ராஜசேகர
மார்கழித்திங்களில் 24மணிநேரத்தில்,மூன்று ரங்கர்களை சேவிக்கவேண்டுமென்ற நியதி.

சேவிக்க இயலாதவர்கள் இப்போது சேவியுங்கள்
ஆதிரங்கம்:-ஸ்ரீரங்கப்பட்டினம்.
மத்யரங்கம்:-ஸ்ரீவனசமுத்ரம்,
அந்த்யரங்கம்:-ஸ்ரீரங்கம்



வாட்ஸ்அப்

வாட்ஸ் அப்பில்

நாம் ஏதாவது ஒரு சேதி அனுப்பினால் அதில் டிக் மார்க் ( ✓) இருக்கும்.

 இதன் அர்த்தம் என்ன?

ஒரு ✓  சேதி அனுப்ப பட்டது

இரண்டு ✓✓ சேதி கிடைத்தது

இரண்டு  நீல நிறம் ✓✓ சேதி பார்க்கப்பட்டது...

மூன்று  நீலம் ✓✓✓ அரசாங்கம் பார்த்து விட்டது...

 இரண்டு நீலம் ✓✓ ஒரு  சிகப்பு ✓ இருந்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்போகிறது.

  என அர்த்தம்.....
அனைவருக்கும் தெரியபடுத்தவும் Share panuga

ஓடமும் பாடமும்.

இன்று  அமெரிக்காவில் உள்ள ஒரு நண்பருக்கு ஆங்கிலத்தில் இந்த கதையை எழுதும்போது, மற்றவர்களுக்கும் பயன் படட்டுமே என்று சிறிய தமிழ்க்  கதையாக சொல்கிறேன்.

சில விஷயங்கள்  பாரதத்தில் தேடும்போது கிடைக்காது. பாகவதத்தில் கண்ணில் படும். ராமாயண விஷயம் பாகவத்தில் அறியும்போது அட இது எப்படி ராமாயணத்தில் படிக்கவில்லை என்று ஆச்சர்யப்பட வைக்கும்.
அதற்கு எல்லாம் காரணம் காரியம் அவசியமில்லை. அதில் உள்ளடங்கிய நீதி அல்லவோ முக்கியம்.

ராமனை ஊரே, உலகமே அறியும் எனும்படி  அவன் மஹிமை, பெருமை எங்கும் பரவிஇருந்தது.
ராமன் காட்டிற்
கு போக உத்தரவு. சீதை லக்ஷ்மணன் அவன் கூட செல்கிறார்கள்.  கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும்.    அப்போது தான் முதன் முதலாக குகன் ராமனை பார்க்கிறான்.  ராமனைப் பற்றி சகல விஷயங்களும் அவனுக்கு தெரியும்.  நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ராமனை காணமுடியாமல் கண்களில் கண்ணீர்த்திரை.

''என்னால் உனக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?'' என பக்தியோடு கேட்கிறான்.
''கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா.''
அப்போது ஒரு படகு  யாரையோ இறக்கி விட்டு விட்டு புறப்பட தயாராகியது.  கேவத் என்பவன் ஓடக்காரன். குகன் அவனை அணுகி  ''கேவத்  உன் படகை இங்கே கொண்டுவா '' என படகு நெருங்கி வருகிறது.
''கேவத், இதோ நிற்கிறார்களே  யார் தெரியுமா  அயோத்தி மஹாராஜா, ராமர், அது சீதாதேவி ராணி, அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவருடைய வீர சகோதரன்.இவர்களை அக்கரை  கொண்டு  சேர்''
 கேவத் ராமலக்ஷ்மணர்களை சீதாவை வணங்குகிறான். அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும்போதும் இரவில் பாட்டுக்கு முன்பும் ராம நாமம் சொல்பவன்.

'' ஐயா குகனே,  நான் இவர்களை கங்கையின் மறுகரை கொண்டு சேர்க்கிறேன்.  ஆனால்  முதலில் இந்த ராமரின் கால்களை நன்றாக கழுவிவிடவேண்டுமே . தூசு தும்பு இருக்கக்கூடாது ''
' ஓ   அவருக்கு பாத பூஜையா, அதை அப்புறம் மறுகரையில் இறக்கி விடும்போது வைத்துக் கொள் ''-  குகன்.
''அப்படி இல்லை ஐயா,  என் படகில் ஏறுவதற்கு முன்னால் தான் அதை செய்யவேண்டும்.''
குகனின் கண்கள் கோபத்தால் சிவந்தது. என்ன பிடிவாதம் இந்த கேவத்துக்கு.
கேவத் இதை கவனித்துவிட்டு  நேராக  ராமனை வணங்கி சொல்கிறான்.
''மஹாராஜா,  நான் ஒரு ஏழை ஓடக்காரன். இந்த பழைய சிறிய ஓடம் தான் எனக்கு ஜீவனோபாயம். இதில் கிடைக்கும் சிறிய வருமானம் என் மனைவியையும் என்னையும் வாழ வைக்கிறது. என்னிடம் வேறு படகு  கிடையாது,இன்னொன்று வாங்க வசதியும் இல்லை ''
''எதற்கு இப்படி பேசுகிறாயப்பா '' -  ராமர்.
''எனக்கு உங்களை பற்றி தெரியுமய்யா.  உங்கள் காலில் உள்ள தூசி பட்டால் போதும்  கல்லும் கூட பெண்ணாகும். உங்கள் கால் தூசி  பட்டு என் படகும் ஒரு பெண்ணானால் நான் அவளை எப்படி  காப்பாற்றுவேன், என் படகு காணாமல் போய்விடுமே!''  அந்த ஆபத்து என் படகுக்கு வரக்கூடாது என்பதற்காகவே

கடலுக்கு அடியில் மஹாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை வரைந்து காட்டும் அபூர்வ மீன்

ஆரோக்கியமும் அழகும்

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்
#பயன்உள்ளதகவல் #
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
 

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

First Train

#Petta #Meme #Review
No Offence.... படம் சூப்பர்... But கொஞ்சம் length ஆம்....
#பேட்ட மீம் விமர்சனம்.... உங்கள் கருத்தை comments செய்யவும்....

Tuesday, January 8, 2019

Reason Behind the Name

ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?

ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்? தகவல்களை தொகுத்து இருக்கிறேன்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
1. உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும் சுமார் 40-50 மில்லியன் பக்தர்களை கொண்டு மெக்கா விற்கு அடுத்த படியாக அதிகம் பயணப்படுகிற இடம் சபரிமலை 🚩
2. சைவம் மற்றும் வைணவ பிரிவுகளின் ஒற்றுமை உருவமாக பார்க்கப்படுகிற புண்ணிய கோவில் சபரிமலை 🚩
3. மதுரையில் இருந்து தன் சொந்த அமைச்சர்களால் உயிருக்கு ஆபத்து என கருதி சென்ற ராஜசேகர பாண்டியன் திருவிதாங்கூர் மன்னனால் உதவப்பட்டு பந்தள தேசத்து மன்னனாக ஆட்சி செய்தான். அவரின் வளர்ப்பு மகனே ஐயப்பன்🚩
4. ராஜசேகர பாண்டியன் பம்பை நதிக்கரையில் வேட்டையாட சென்றபோது கண்டெடுத்த கடவுள் அவதாரமே குழந்தை மணிகண்டன் (ஐயப்பன்). 🚩
5. 12 வயது வரை மணிகண்டன் மனித உருவமாக வளர்ந்து தன அவதார நோக்கம் முடிந்த உடன் தியானம் செய்ய சென்ற இடமே இன்றைய சபரிமலை 🚩
6. பந்தள வம்சத்தை சார்ந்த நபர்கள் இன்றும் சபரிமலை செல்வதில்லை. தன் தந்தை ராஜசேகர பாண்டியன் சபரிமலை வந்தால் ஐயப்பன் எங்கு எந்தித்துவிடுவாரோ என்று அவர் கால்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. அதனால் தான் அந்த ஐதீகம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. 🚩
7. பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் தன் வளர்ப்பு குழந்தை ஐயப்பனுக்காக செய்ததே திருவாபரண பெட்டி.. இதில் தங்கத்தில் சிறிய வடிவில் புலி,யானை, வாள், மாலை போன்றவை உள்ளன.. ஓலை சுவடிகளை இன்றும் காணலாம்🚩
8. ராஜசேகர பாண்டியன் தன் மனைவி தலைவலி என்று சொல்லி புலியின் பாலை அடர்ந்த காட்டிற்குள் ஐயப்பனை கொண்டு வர சொன்னபோது இரண்டு முடிச்சுக்களில் பாதுகாப்பிற்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பியதே இன்று இருமுடியாக ஐயப்ப பக்தர்கள் பின்பற்றுகின்றனர்🚩
9. இந்தியாவில் கோவில் வளாகத்தில் (சன்னிதானத்தில்) அரேபிய முஸ்லிம் வாவர் சுவாமியாக காட்சி அளிப்பது சபரிமலையில் மட்டுமே.. வாவர் ஐயப்பனின் நெருங்கிய நண்பர்.. இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம் அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது.மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டு🚩
10. ஹரிவராஸனம் விச்வமோஹனம் என்ற புகழ்பெற்ற கே ஜே யேசுதாஸ் பாடிய பாடலே நடை அடைப்பில் ஐயப்பன் உறங்குவதற்காக இசைக்கப்படுகிறது. இந்த பாடலை எழுதியவர் கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர்.இவர் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி🚩
11. Memoir of the survey of Travancore and Cochin states என்ற ஆங்கிலேயர் 1894 ல் எழுதிய புத்தகத்தில் சபரிமலைக்கு செல்வோர் அப்போதே ஆண்டு தோறும் 15000 என்று குறிப்பிட்டு இருக்கிறார். அப்போதைய மக்கள்தொகை தென் இந்தியாவில் 5 கோடிக்கும் கீழ்.🚩
12. பரசுராமரால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஐயப்பன் சிலை 1950 ல் தீவிபத்தில் சேதம் அடைந்தது. இன்று அந்த சிலை உருக்கபட்டு கோவில் மணியாக கொடி மரம் அருகே காட்சி அளிக்கிறது. 🚩
13. தீவிபத்தை தொடர்ந்து சிலையை யார் செய்ய வேண்டும் என்ற தேவபிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது. அதில் மதுரை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் பி.டி.ராஜனும் பெயர்கள் வந்தன. அவர்கள் வழங்கிய விக்கிரகத்தைத்தான் இன்றைக்கும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம். அந்த சிலை கும்பகோணத்தில் அடுத்த சுவாமிமலையில் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியால் செய்யப்பட்டது. 🚩
14. கேரளாவில் கோயில்களில் பராமரிப்பு பணிகளோ, முக்கிய மாற்றங்களோ நடத்த வேண்டும் என்றால் கடவுளிடம் அனுமதி கேட்பதற்காக ‘தேவபிரசன்னம்’ என்ற பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படியே இன்றும் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமெனில் தேவபிரசன்னம் செய்யப்பட்டு கடவுளின் அனுமதி பெற வேண்டும் என்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு. 🚩
15. Kamakhya Temple (Guwahati, Assam), Lord Kartikeya Temple (Pehowa, Haryana and in Pushkar, Rajasthan) Haji Ali Dargah (Mumbai, Maharashtra) Mangal Chandi Temple, (Bokaro, Jharkhand) Sree Padmanabhaswamy Temple (Malayinkeezhu, Kerala) Patbausi Satra (Barpeta, Assam) Jain Temple (Ranakpur, Rajasthan) போன்ற கோவில்களை போல சபரிமலையும் பெண்களை அனுமதிப்பதில்லை 🚩
16. ஐயப்பனை சாஸ்தாவாக வழிபடும் முறை தமிழகத்தில் இருப்பதே. முக்கியமாக தென் மாவட்டங்களில் அய்யனார் வழிபாடு மிக பிரபலம். அதில் ஆதி சாஸ்தாவாக காட்சி அளிக்கும் இடமே சொரிமுத்து அய்யனார் கோவில் பாபநாசம், 🚩
17. விரத முறையில் உணவை உண்டு அன்னதானம் செய்ய வேண்டும் என்பது சபரிமலை யாத்திரையில் மட்டுமே. மற்ற முறைகளில் விரதம் என்றால் உணவை உட்கொள்ளாமல் இருப்பது.🚩
18. ஏழை,பணக்காரர்,சாதி, உயர் அதிகாரி,பாமரன் என பாகுபாடு அன்றி அனைவரையும் சாமியாக பார்ப்பதே சபரிமலையின் தனிச்சிறப்பு.🚩
19. 41 நாட்கள் விரதம் இருக்கும் முறை சபரிமலை யாத்திரையில் மட்டுமே காணப்பட கூடிய ஒன்று. வேறு எந்த கோவிலிலும் காண முடியாத கடுமையான விரத முறை. 🚩
20. அடர்ந்த காட்டிற்குள் வன விலங்குகள் தாக்கும் அபாயத்திற்கு மத்தியில் நடைபயனமாக 60 கிலோ மீட்டர் செல்வது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மட்டுமே 🚩
21. கேரள கட்டுமான முறையையும் தமிழ்நாட்டின் சாஸ்தா வழிபாட்டையும் இணைத்து இரு மாநிலத்தின் ஒற்றுமை சின்னமாக இருப்பது சபரிமலை 🚩
22. மணிகண்டன் கல்வியை குருவிடம் தான் பயில வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜசேகர பாண்டியனின் ஆசையே இன்று குரு தத்துவமாக குருசாமியாக ஐயப்ப யாத்திரையில் இருக்கிற வழக்கம்.. தன்னை காண வேணுமெனில் குரு மூலமாகத் தான் வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஐயப்பன் 🚩
23. மற்ற கோவில்களை போல் தினமும் அல்லாமல் ஆண்டில் வெறும் 120 நாட்களுக்கும் குறைவாக நடை திறந்து இருக்கும் கோவில் சபரிமலையே🚩
24. சபரிமலை யாத்திரையை தமிழக மக்களிடையே மிகவும் பிரபல படுத்தியவர் நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளை ... பாடல்கள் மூலம் பிரபலபடுத்தியவர்கள் வீரமணி சோமு மற்றும் அவர் தம்பி கே வீரமணி.🚩
25. இன்று போல் அடர்ந்த காட்டில் சாலை,ஹோட்டல்கள் இல்லாத காலத்தில் தமிழக பக்தர்களுக்காக உணவும் பேருந்து வசதியையும் ஏற்படுத்தி குருவாக இருந்தவர் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட புனலூர் தாத்தா சுப்ரமணிய அய்யர்.🚩
26. ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருக்கும் வாவர் மசூதிக்கு சென்று வாவரை வணங்குவது வழக்கம். அதன் பிறகே பெருவழியில் நுழைகின்றனர். எந்த இந்து கோவிலிலும் இல்லாத இந்த முறை சபரிமலையை தனித்துவமாக காட்டுகிறது. 🚩
27. சபரிமலைக்கு மற்ற கோவில்களை போல் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்கிற வழக்கம் இல்லை. ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் பக்தியாலும் அதன் சக்தி குறையாமல் ஒவ்வொரு வருடமும் அதன் சைதன்யம் கூடிக்கொண்டே செல்வதாக நம்பப்படுகிறது. 🚩
28. பரசுராமர் உருவாக்கிய சிறிய ஆலயத்தை மாற்றி அமைத்து பதினெட்டுபடிகளோடு உருவாக்கியவர் பந்தள அரசர் ராஜசேகர பாண்டியன். 🚩
29. சபரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம். அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.🚩
30. சபரிமலையில் மாளிகைபுறத்து அம்மன் சன்னதி என்பது ஐயப்பன் வதம் செய்த பெண் மகிஷியின் தூய்மை வடிவமே. வதம் செய்த பிறகு ஐயப்பன் தன்னை மணந்து கொள்ள விருப்பம் சொன்ன போது “என் அருகிலேயே நீ இருக்கலாம் என்றும் எப்போது என்னை ஒரு கன்னிசாமியாவது வராமல் இருக்கிறாரோ அன்று உன்னை மணந்து கொள்கிறேன்” என்று கூறியவன் பிர்மச்சர்யம் கொண்ட ஐயப்பன்.. அந்த மாளிகைபுரத்து அம்மன் இன்றும் காத்துக் கொண்டு இருக்கிறாள்.. ஆண்டு தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. 🚩🚩🚩
#சுவாமியே_சரணம்_ஐயப்பா
#பதினெட்டாம்_படி_கருப்பசாமி_சரணம்
Sabariyatra-2018 @ Sabarimala in my Sri maha prabu group pallikaranai
Chennai-600100 Swamy saranam !!!