Wednesday, March 6, 2019

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்
புதுவை என்றால் நம் அனைவருக்குமே பாண்டிச்சேரிதான் நினைவுக்கு வரும்;

தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு புதுவை என்ற பெயரில் ஒரு கிராமம் இருந்தது.அந்த கிராமமே பிற்காலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயரில் நகரமாக மாறியது.

ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அருள்மிகு வைத்தியநாதசுவாமி சிவகாமி அம்பாள்  கோவில் அமைந்திருக்கிறது.இந்தக்  கோவிலின் பழைய பெயரே புதுவை ஆகும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகத்தில் சிவகெங்கைத்தீர்த்தம் என்ற பெயரில் ஒரு குளம் இருக்கிறது.

ஜீரத் தேவர்  இங்கே தான் இருக்கிறார்.விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் பழமையான சிவாலயம் இது மட்டுமே!

வன்னி மரமே இந்தக் கோவிலின் தல விருட்சமாக இருக்கிறது.ஆறு அடி உயரமுள்ள நடராஜர் இங்கே தெற்கு நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார்.

Intel Powered Laptop

தமிழின் சிறப்பு

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
 இதுவே தமிழின் சிறப்பு

அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்

Get upto 40% off on Cooking Essentials : Valid till : Stock Lasts


Wednesday, February 20, 2019

ஸ்ரீ சாய்பாபா

பாபாவை அணுக விசேஷமான வழி முறைகள் ஏதுமில்லை. நம் தாயை எப்படி அணுகுவோம்? இம்மாதிரி ஒரு கேள்வி கேட்பது மடத்தனமானது. அன்பு என்ன என்று குழந்தை உணருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே தாய் தன் குழந்தைகள் மீது அன்பைப் பொழிந்து வருகிறாள். அதே போல் பாபா குழந்தைகள் மீது அன்பைப் பொழியும் ஒரு கண்ணுக்குத் தெரியாத அன்னையின் பாத்திரத்தை ஏற்று, முற்பிறவிகளிலிருந்தே தொடர்ந்து தம் பக்தர்களாகிய குழந்தைகள் மீது அன்பைப் பொழிகிறார். ஆனால் அவர்கள் இப்போது பாபாவை எப்படி அணுகுவது? அவர்கள் பாபாவை அணுகவேண்டும் என மனப்பூர்வமாக விரும்பட்டும். உடனே அணுகுமுறை துவங்கிவிட்டது. அக்கணத்திலிருந்தே அவர்கள் நிலையில் முன்னேற்றம் ஆரம்பமாகிவிட்டது. அவர்கள் மேலும் மேலும் உற்சாகமடைகின்றனர், மேன்மேலும் பலன் அடைகின்றனர். முதலில் ஒரு வித நன்றியுணர்வையும், நாளடைவில் பிரேம பக்தியையும் அவர்கள் பெறுகிறார்கள். பக்தர்கள் பாபாவின் திருவுருவை தங்களிடம் உள்ள லாக்கெட்டுகள்,  படங்கள் ஆகியவற்றில் அடிக்கடி பார்த்து, பாபாவின் திருவுருவை தினமும் மனதில் கொண்டுவரட்டும், கவிஞனின் கற்பனைகள் எல்லாவற்றையும் விட திறன்படைத்த பாபாவின் அத்புத லீலைகளை [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்] படிக்கட்டும். பாபாவின் குணாதிசயங்களை நினைவுபெற பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளி [108 நாமாக்கள்] மிக்க சக்தி வாய்ந்த சாதனம். ஆர்வமுள்ள பக்தர்கள் ஒன்று கூடி செய்யும் பூஜைகள், பஜனைகள் ஆகியவற்றில் பங்கு கொள்ளட்டும். ஆர்வமுள்ள சாதகனுக்கு பாபாவே மேற்கொண்டு உள்ள வழிகளைக் காட்டுவார். ஒவ்வொரு உண்மையான பக்தனுக்கும் பலவித வழிகளில் பாபாவுடன் மேற்கொண்டு தொடர்பு எப்படி வைத்துக் கொள்வது, அதை எப்படி வளர்த்துகொள்வது என்பது பற்றி பாபாவே உணர்த்துவார். பாபா கடைபிடிக்கும் முறைகள் பலவகைப்படும். உணர்ச்சிமிக்க துடிப்புள்ள சில பக்தர்கள் இன்றும் பாபாவைக் காண்கிறார்கள், விழிப்புடன் இருக்கும்போதே அவருடன் பேசவும் செய்கிறார்கள். சிலருக்கு கனவுகளில் இந்த அனுபவம் கிட்டுகிறது. பாபாவே தெய்வம் என்ற திடமான நம்பிக்கை கொண்ட சாயி பக்தர்கள் எண்ணற்றவர்கள், அவர்கள் தங்கள் பிரார்த்தனைகள் பாபாவால் ஏற்கப்பட்டு பலன்களைப் பெறுகிறார்கள்.- பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமி.

உப்புமா பாஸுரம்…

உப்புமா பாஸுரம்…
ஶ்ரீமடத்தில் ஒருநாள் இரவு வேளை. சில பாரிஷதர்களைத் தவிர ஒரே ஒரு பக்தர்.
பெரியவா… இவர்களுடன் ஏகாந்தமாக பேசிக் கொண்டிருந்தார்.
“ஆஹாரம் பண்ணியாச்சா?”
“ஆச்சு. பெரியவா”
“என்ன ஸாப்ட்டே?”
“உப்புமா………
“ஒனக்கு ஒரு கதை தெரியுமோ?…. உப்புமாக் கதை !….”
ஸ்வாரஸ்யம் தட்டியது.
“தெரியாது….”
“கேளு……ஒரு பக்தர் ஸ்ரீரங்கத்துக்கு போனார். பெருமாளை ஸேவிச்சார்.
ஸேவிச்சாரா?… அப்றம் ராத்ரி ஒரு சத்ரத்ல தங்கி, அங்க போட்ட உப்புமாவை
ஸாப்ட்டார்….
……என்னடான்னா……..! உப்புமா ஸெரியா வேகவேயில்ல! அதோட, சின்ன சின்னதா நெறைய
கல்லு வேற ! பல்லுல பட்டு பட்டு வாய்ல குத்தி, வாயெல்லாம்…. ஒரே புண்ணாயி…
செவந்து போச்சு.! அதோட போச்சா! ஏகப்பட்ட மொளகாயப் போட்டு தாளிச்சிருந்ததால,
கொள்ளி காரம் ! தாங்கவே இல்ல ! எல்லாமா சேர்ந்து, கண்ணால ஜலம் விட
வெச்சுடுத்து.! கண்ணெல்லாம் செவந்தே போச்சு! அந்த ஶ்ரமத்ல கூட, பக்தரோல்லியோ?
ஒரு பாட்டு ஞாபகம் வந்து பாடினாராம்..! ஒனக்கு தெரியுமோ?”
“தெரியாது பெரியவா”
அவர் வாயால் கேட்பதில் உள்ளே ஆனந்தமே தனி !
“என்ன அப்டி சொல்ற?…. பச்சை மா மலைபோல் மேனி-னு தொண்டரடிப்பொடியாழ்வார்
பாஸுரம் !”
“அது தெரியும் பெரியவா…”
“அப்போ ஸெரி. இவர் கொஞ்சம் மாத்திப் பாடினாராம்…

*பச்சைமா [வேகாத ரவை];
மலைபோல் மணி [உப்புமால இருந்த குட்டி குட்டி கல்லு];
பவளவாய் [ஸாப்ட்டவன் வாய் புண்ணாயி செவந்து போனது];
கமல செங்கண் [காரம் தாங்காம கண்ணுலேர்ந்து ஜலம் கொட்டி, கண்ணெல்லாம் செவப்பா
ஆய்டுத்தாம்];
அச்சுதா !………என் அப்பனே !……!”*

அழகாக பாடி பாடி அர்த்தம் சொல்லிக் கொண்டே வந்த பெரியவா…. மேலே பேச முடியாமல்
குலுங்கி குலுங்கி சிரிக்க, சுற்றி இருந்தவர்களும் அந்த மலர்ந்த சிரிப்பில்
மனஸை பறிகொடுத்து, சிரித்தனர்.
கள்ளமில்லாத குழந்தையின் சிரிப்பும், தெய்வக் கிழவனின் சிரிப்பும் மனஸை
அப்படியே கொள்ளையடித்துவிடுமே!

கோவில் அதிசயங்கள்!

கோவில் அதிசயங்கள்!
அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித் தன்மையுடன் அமைத்தனர்.

ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் – நடராஜர் கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சி தருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8, 16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள். அப்போது கருடனின் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9. கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்
Get upto 80% off on Health - Grooming : Valid till : Stock Lasts

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர் சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டை தாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்பு வரை மனித உருவம், கிழே மீன் வடிவம் கொண்டுள்ளார்.

14 தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கிமீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண் வடிவில் உள்ளது.

15 மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு கோபுரங்கள் கிடையாது.

16 கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு - பெருமாளோடு எக்காலத்திலும் வெளியே வராத காரணத்தால் தாயாருக்கு இந்தப் பட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏